டாட் பிலிப்ஸ் இயக்கி மற்றும் ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட்திரைப்படம் ஜோக்கர். இத்திரைப்படம் டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் திரை முன்னோட்டம் வரும் ஏப்ரல் 9 – இல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோக்கர் திரைப்படம் பத்திரிக்கையாளர்களிடம் இருந்தும் விமர்சகர்களிடம் இருந்தும் மிகுந்த பாராட்டுகளை பெற்றது. இப்படத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார்.