Home News India ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படத்தின் அறிவிப்பு காணொளி எப்படி இருக்கு?

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படத்தின் அறிவிப்பு காணொளி எப்படி இருக்கு?

‘ரஜினிகாந்த்’ அவர்களின் 171-வது படத்திற்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தின் இயக்குனர் ‘லோகேஷ் கனகராஜ்’. சுமார் 3:15 நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியில் தங்க நகைகள், தங்க சிலைகள், வாட்ச்சுகள், தங்கக் கட்டிகள் அனைத்தையும் கொள்ளையர்கள் ஒன்று சேர்த்து கொண்டிருக்கின்றனர். ரஜினி உள்ளே வருவதாக தகவல் சொல்லப்படுகிறது. அடுத்து கதவில் வெளிப்புறத்தில் இருந்து ரஜினியின் கண்கள் தெரிகிறது, எதிரிகளை அடித்து துவம்சம் செய்து கொண்டே உள்ளே வருகிறார். தங்க பொருட்கள் வண்ணமாகவும் மற்றவை எல்லாம் பிளாக் அண்ட் ஒயிட் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்தின் ‘ரங்கா’ திரைப்படத்தின் வசனம் இவரால் கூறப்படுகிறது. “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள், தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு, அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே, எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே” என்ற வசனம் வைக்கப்பட்டுள்ளது.

1981-ல் பில்லா ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய ‘தீ’ படத்திலும் 1993-ல் பி வாசு இயக்கத்தில் வெளியான உழைப்பாளி படத்திலும் கூலியாக நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

‘சரத்குமார்’ நடிப்பில் ‘கூலி’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் மீண்டும் இப்படத்திற்கு இந்த பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படம் ‘வேட்டையன்’, ஞானவேல் இயக்கி வருகிறார், அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி இன் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘அன்பரறிவு’ ஸ்டண்ட் இயக்குனர்கள் ஆகவும், அனிருத் அவர்கள் இசையமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

Title Teaser Link