Home Gallery Celebrities ‘தளபதி’விஜயின் ‘கில்லி’ திரைப்படம் ஏப்ரல் 20-இல் உலகமெங்கும் மறு வெளியீடு!

‘தளபதி’விஜயின் ‘கில்லி’ திரைப்படம் ஏப்ரல் 20-இல் உலகமெங்கும் மறு வெளியீடு!

இயக்குனர் தரணி இயக்கத்தில் ‘தளபதி’விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ என்ற திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கில்லி’.

விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வித்யாசாகர் இசையில் ‘அப்படி போடு’ மற்றும் எல்லா பாடல்களும் வெற்றி பெற்ற இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்திற்கான மறு வெளியீடு தேதியை சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழில் பழைய படங்களை மறு வெளியீடு செய்யும் போக்கு சமீபத்தில் அதிகரித்துள்ளது. சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷ் நடித்த ‘3’, சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு மீண்டும் வரவேற்பை பெற்ற நிலையில் ‘கில்லி’ திரைப்படமும் மறுவெளியீடாக உள்ளது, ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.