V4UMEDIA
HomeGalleryCelebrities'புஷ்பா-2' டீஸர் எப்படி இருக்கு?

‘புஷ்பா-2’ டீஸர் எப்படி இருக்கு?

திரையுலகின் முன்ணனி நடிகர்களில் ஒருவரான நடிகர் ‘அல்லு அர்ஜுனின்’ பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் ‘புஷ்பா-2:தி ரூல்’ படத்தின் டீசர் வெளியானது. தெலுங்கானாவில் பழங்குடி மக்களின் திருவிழாவான ‘ஜாதரா’ உடன் டீசர் தொடங்குகிறது. ‘சம்மக்க சாரலம்மா ஜாதரா’ என்பது இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் பழங்குடியினர் தெய்வங்களை கௌரவிக்கும் ஒரு திருவிழா ஆகும்.இந்த ஜாதரா உலகின் மிகப்பெரிய மனித கூட்டங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

கழுத்தில் மாலை, காலில் சலங்கை, காதில் தோடு, ஆபரணங்களுடன் சேலை அணிந்து வித்தியாசமான அலங்காரத்துடன் புது வித தோற்றத்தில் காட்சியளிக்கிறார் ‘அல்லு அர்ஜுன்’.சுதந்திர தினமான ஆகஸ்ட்-15, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை இந்த டீசரில் தெரிவித்துள்ளனர்.

பல மக்கள் கூடியிருக்கும் அந்த திருவிழாவில் அவருக்கு மாஸான அறிமுகம் கொடுக்கப்படுகிறது.’தேவி ஸ்ரீ பிரசாத்’ அவர்களின் பின்னணி இசைக்கான உழைப்பு நன்றாகவே தெரிகிறது.’அல்லு அர்ஜுன்’ சிலரை அடித்து விட்டு செய்யும் சைகையும், அதன்பின் நடந்து வருவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Most Popular

Recent Comments