‘கேங்ஸ் குருதிப்புனல்’ இணையத் தொடரின் ஒளிபரப்பும் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. நடிகர் அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இக்கதை ’70’ காலகட்டத்தில் நடக்கும் கதைக்களம் ஆகும்.ஒரு துறைமுக நகரத்தின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுக்குள் பழிவாங்கும் மற்றும் அதிகாரத்தை மீட்டெடுக்கும் கதைக்களமாக இது அமைந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த இணையத் தொடரின் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றுகிறார்.
‘நோவா’ இக்கதையை இயக்கியுள்ளார். இக்கதையை நோவாவுடன் சேர்ந்து தமிழ் பிரபா மற்றும் பிரபு காளிதாஸ் எழுதியுள்ளனர். ‘கேங்ஸ் குருதிப்புனல்’ இணையத் தொடர் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.