HomePR NewsCelebrities‘விக்ரம்’ நடிக்கும் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் அதிரடியான ஒரு காட்சி வெளியானது!

‘விக்ரம்’ நடிக்கும் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் அதிரடியான ஒரு காட்சி வெளியானது!

‘சித்தா’ திரைப்படத்தின் இயக்குனர் ‘எஸ்.யு. அருண்குமார்’ இயக்கத்தில் ‘சீயான் விக்ரம்’ நடிக்கும் அவரது 62 – வது படமான இதன் தலைப்பு ‘வீர தீர சூரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ‘எஸ்.ஜே.சூர்யா’, ‘சுராஜ் வெஞ்சரமூடூ’ ‘துஷாரா விஜயன்’ என பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ்’ சார்பில் ‘ரியா ஷிபு’ அவர்கள் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘ஜி.வி. பிரகாஷ் குமார்’ இசையமைக்கிறார். விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு காட்சி ஒன்றை பட குழு வெளியிட்டனர்.

இந்த காட்சியில் இரவு நேரத்தில் மளிகை கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விக்ரமை கொள்வதற்காக சிலர் திட்டமிடுகிறார்கள் அவர்களை விக்ரம் எதிர் கொள்ளும் அந்த காட்சி அருமையாக இருக்கிறது. இது ரசிக்கும்படி இருப்பதற்கான காரணம் ‘ஜி.வி. பிரகாஷ்’ அவர்களின் பின்னணி இசையும் ஒலிப்பதிவு செய்த விதமும் ஆகும்.

Vikram At The ‘Kadaram Kondan’ Press Meet

விக்ரம் அவர்களின் தோற்றம் இந்த காணொளியில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் பாகம் 2 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே முதல் பாகம் அடுத்து சில நாட்களில் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

இத் திரைப்படதின் கானொலி – https://www.youtube.com/watch?v=0utMPC7YxDM

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments