தமிழ்த் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,’ஜெய் பீம்’ புகழ் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில்,’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்த் உடன் பாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’அமிதாப் பச்சன்,ராணா டகுபதி, ஃபகத் பாசில்,மஞ்சு வாரியர், ரித்திகா சிங்,துஷாரா விஜயன்,ஜி.எம்.சுந்தர் மற்றும் ரக்ஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்,நடிகைகள் நடிக்கிறார்கள்.
இத்திரைப்படத்திற்கு இளைஞர்களின் இதயத்தை கொள்ளை கொண்டுள்ள இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க, எஸ். ஆர்.கதிர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
இத்திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றியடைந்த விக்ரம் திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணியையும், அதே திரைப்படத்தின் சண்டை பயிற்சி இரட்டை இயக்குனர்களான அன்பறிவு சண்டைப் பயிற்சி இயக்கத்தையும், கே.கதிர் மற்றும் சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.