V4UMEDIA
HomeGalleryCelebritiesகோவில் யானையை வணங்கி ஆசி பெற்ற 'யோகி'பாபு!

கோவில் யானையை வணங்கி ஆசி பெற்ற ‘யோகி’பாபு!

கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘யோகி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென தனிமுத்திரை பதித்தவர் ‘யோகி’பாபு. தமிழ் சினிமாவில் நாகேஷ்,தங்கவேலு,கவுண்டமணி, செந்தில், வடிவேலு,விவேக், சந்தானம்,சூரி இவர்கள் வரிசையில் ‘யோகி’பாபு அவர்களும் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் ‘யோகி’பாபு குணச்சித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் சாதித்துக் கொண்டிருக்கிறார்.

2012-ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையான திரைப்படமாகும்.இவரது நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ தேசிய விருது பெற்ற திரைப்படமாக அமைந்தது. பொம்மை நாயகி,லக்கி மேன்,கடைசி விவசாயி,பரியேறும் பெருமாள், கர்ணன் போன்றவை குறிப்பிடத்தக்க படங்களாகும். பாலிவுட்டிலும் சென்னை எக்ஸ்பிரஸ்,ஜவான் போன்ற பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான அரண்மனை-4 திரைப்படம் ₹100 கோடி வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.

இவர் தனது சொந்த வாழ்வில் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். அதனால் பல கோவில்களுக்கு சென்று வருவது உண்டு. சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கோவில் நகரமான கும்பகோணம் சென்ற பொழுது, அருகில் அமைந்துள்ள உப்பிலியப்பன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார்.

அந்த கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் அங்கு இருக்கும் யானையை வணங்குவதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார். இந்த முறை சென்ற போதும் வணங்கி மகிழ்ந்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் கங்குவா, கஜானா, போட் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

Most Popular

Recent Comments