HomeNewsKollywoodநாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் ஒன்றுகூடிய தெலுங்கு நட்சத்திரங்கள்  களைகட்டிய விழா   

நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் ஒன்றுகூடிய தெலுங்கு நட்சத்திரங்கள்  களைகட்டிய விழா   

கருப்பு வெள்ளை படங்கள்  துவங்கிய காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில்  எம்ஜிஆர், சிவாஜி எப்படியோ அதுபோல தெலுங்கு திரையுலகில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் ஆகியோர் ஜாம்பவான்களாக  கோலோச்சினர். இதில் நாகேஸ்வரராவின் வாரிசான நாகார்ஜுனா, அவரது வாரிசுகளான நாகசைதன்யா, அகில் என அனைவருமே திரையுலகில் பிரபல நட்சத்திரங்களாக நாகேஸ்வரராவின் பாதையை பின்பற்றி பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது நூற்றாண்டு விழா ஹைதராபாத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்வில்  தெலுங்கு திரை உலகின்  முன்னணி நடிகர்களான ராம்சரண், மகேஷ்பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் அந்த நிகழ்வில் மிக நெருக்கமாக அமர்ந்து  உரையாடிய காட்சிகளை பார்க்கும்போது நம் தமிழ் திரை உலகில் இளம் நட்சத்திரங்கள் எப்போது இதேபோல ஒன்றாக  நட்புடன் கூடுவார்கள்  என்கிற எண்ணம் ஏற்படுகிறது.  

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments