உணர்வுபூர்வமான படங்களாக தொடர்ந்து இயக்கி வருபவர் இயக்குனர் தங்கர் பச்சான். அந்த வகையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன என்கிற படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் பாரதிராஜா, யோகி பாபு இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் தங்கர் பச்சான், அவருக்கு திடீரென ரஜினி மீது என்ன கோபமோ தெரியவில்லை ஜெயிலர் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பையும் அதற்கு கிடைக்கும் வசூலையும் மறைமுகமாக விமர்சித்தார்.
அப்படி அவர் விமர்சித்ததால் அது அவருக்கு எதிராகவே திரும்பி ரசிகர்கள் பலரும் அவருக்கு கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அப்படியே பல்டி அடிக்கும் விதமாக ரஜினிகாந்த் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார் தங்கர் பச்சான்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, “ஒன்பது ரூபாய் நோட்டில்’ ரஜினிகாந்த் நடித்திருந்தால் தமிழ் சினிமாவின் போக்கே மாறியிருக்கும். இந்த கருமேகங்கள் கலைகின்றன படத்தில் அவர் நடித்திருக்க வேண்டும்.. ஏனென்றால் ரஜினி அண்ணன் அடிப்படையிலேயே சிறந்த நடிகர்” என்று கூறியுள்ளார்