V4UMEDIA
HomeNewsKollywoodஸ்ட்ரைக்கர் படத்தின் டிரைலர் வெளியானது

ஸ்ட்ரைக்கர் படத்தின் டிரைலர் வெளியானது

தமிழ் சினிமாவில் தட்டுப்பாடு இல்லாத கதைக்களம் என்றால் ஹாரர் தான். மாதத்திற்கு இரண்டு ஹாரர் படங்களாவது வெளியாகி விடுகின்றன. அதே சமயம் ஹாரர் படங்களில் ஏதாவது வித்தியாசம் காட்டினால் தான் ரசிகர்களின் வரவேற்பை பெற முடியும். அந்த வகையில் தற்போது ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ஸ்ட்ரைக்கர்.

எஸ்ஏ பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்துள்ளார். கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

டிரைலரை பார்க்கும்போது வித்தியாசமான கதை சொல்லல் மற்றும் புதிய பாணியிலான மேக்கிங் என நிச்சயமாக ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற அம்சங்கள் இருப்பதை உணர முடிகிறது.

Most Popular

Recent Comments