HomeNewsKollywoodவிஜய்யின் மகனை இயக்குனராக அறிமுகப்படுத்தும் லைக்கா

விஜய்யின் மகனை இயக்குனராக அறிமுகப்படுத்தும் லைக்கா

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே நடிகர் நடிகைகளின் வாரிசுகள் தங்களது தந்தையைப் போல நடிப்பிலேயே களம் இறங்குவது தான் அல்லது இறக்கி விடப்படுவது தான் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் எந்த ஒரு இயக்குனரின் மகனும் தந்தையை போல டைரக்ஷனை விரும்பி செய்ததாக பெரிய அளவில் உதாரணங்களை சொல்ல முடியாது. அதே சமயம் இயக்குனர்களின் மகன்களும் நடிகராக முயற்சித்து வரும் இந்த வேளையில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்.

இவர் இயக்கும் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. கடந்த இரண்டு வருடங்களாகவே விஜய்யின் மகன் சினிமாவில் நுழையப் போகிறார் என்றும் ஆனால் தந்தையை போல நடிகராக இல்லாமல் தனது தாத்தாவைப் போல டைரக்ஷன் துறையில் தான் அவர் நுழைய இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.

இதற்கான டைரக்ஷன் படிப்பை கூட வெளிநாட்டில் அவர் படித்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் யார் நடிக்கின்றனர் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்கிற விவரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments