V4UMEDIA
HomeNewsKollywoodயுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படம் ‘ஸ்டார்’

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படம் ‘ஸ்டார்’

சின்னத்திரையில் இருந்து புகழ்பெற்று வெள்ளித்திரைக்கு தாவியவர் நடிகர் கவின். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து சினிமா வாய்ப்புகளும் அவரை தேடிவர ஆரம்பித்தது. அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் நடித்த தாதா என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று கவினை இளம் முன்னணி நடிகர் வரிசைக்கு உயர்த்தியுள்ளது.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இயக்குனர் இளன் இயக்கவுள்ள புதிய படத்தில் கவின் நடிக்கிறார் என்றும் அந்த டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நேற்று அறிவித்திருந்தனர்.

அந்த படத்தின் டைட்டிலை கண்டுபிடிங்கள் பார்க்கலாம் என ஒரு க்ளூவும் கொடுத்திருந்தனர். அதை பார்த்த பலரும் இந்த படத்திற்கு ஸ்டார் என்று தான் டைட்டில் வைக்க இருக்கிறார்கள் என கண்டு பிடித்தனர்.

அவர்கள் யூகித்ததைப் போலவே தற்போது ஸ்டார் என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த படம் இதே தயாரிப்பில் இதே இயக்குனர் கூட்டணியில் ஹரிஷ் கல்யாணை வைத்து ஆரம்பிக்கப்படுவதாக சிறிது காலத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து ஒரு போஸ்டரும் வெளியாகி இருந்தது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது கவின் கதாநாயகராக மாறிவிட்டார்.

Most Popular

Recent Comments