Home News Kollywood சந்திரமுகி 2 விழாவில் ஏற்பட்ட சர்ச்சை ; வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்

சந்திரமுகி 2 விழாவில் ஏற்பட்ட சர்ச்சை ; வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்

பிரமாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாக்களும் தற்போது பிரமாண்டமாக தான் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் நேரு உள் விளையாட்டு அரங்கம் அல்லது சென்னையில் உள்ள பிரபல கல்லூரிகளில் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறுவது வாடிக்கையாக மாறிவிட்டது.

அந்த வகையில் சமீபத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஜே பி ஆர் கல்லூரியில் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர் ஒருவருக்கும் பிரபலங்களுக்கு பாதுகாப்பாக வந்த பவுன்சர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த மாணவனை பவுன்சர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த நிகழ்வு குறித்து விளக்கம் அளித்து தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறும்போது, “இந்த சம்பவம் நடைபெறும் பெற்றது அரங்கத்திற்கு வெளியில். அந்த சமயத்தில் நாங்கள் எல்லோரும் அரங்கத்திற்கு உள்ளே இருந்தோம். இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது அப்போது பெரியது. தாமதமாகத்தான் எங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. நான் எப்போதும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவன் என்பது உங்களுக்கு தெரியும்.

இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது.. யாராக இருந்தாலும் கை நீட்டுவது தவறு. பவுன்சர்கள் இப்படி நடந்து கொண்டதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பவுன்சர்கள் இனி இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறேன்” என கூறி உள்ளார்.