HomeNewsKollywoodஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்த மீனா

ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்த மீனா

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சமீபத்தில் தான் தனது 40 ஆண்டுகால பயணத்தில் அடி எடுத்து வைத்தார். இதற்காக தமிழ் திரையுலகம் சார்பாக அவருக்கு மிகப்பெரிய விழா எடுத்து கொண்டாடப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய சோகம் மறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள மீனா பொது நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்த 2023 இல் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்துள்ளார் நடிகை மீனா. பாரிஸில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மீனா ஈபில் டவர் முன்பாக நின்று தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறும் போது இந்தியாவின் முதல் நடிகராக உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தி வைப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்!” எனக் கூறியுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments