V4UMEDIA
HomeNewsKollywoodமஹிமாவின் கண்களுக்கு கடவுளாகவே காட்சி அளிக்கும் ராகவா லாரன்ஸ்

மஹிமாவின் கண்களுக்கு கடவுளாகவே காட்சி அளிக்கும் ராகவா லாரன்ஸ்

அனைவரும் ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்து வரும் சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், சுபிக்ஷா உள்ளிட்ட பல நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர் வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை மஹிமா நம்பியார் பேசும்போது, “லாரன்ஸ் மாஸ்டர் பேசும்போது அடிக்கடி சர்வீஸ் இஸ் காட் அதாவது சேவையே கடவுள் என்று சொல்வார். அப்படி அவர் செய்து வந்து சேவைகள் ரொம்பவே பெரியது. அந்த வகையில் எனக்குத் தெரிந்த கடவுள் லாரன்ஸ் மாஸ்டர் தான்” என்று குறிப்பிட்டார்.

Most Popular

Recent Comments