V4UMEDIA
HomeNewsKollywoodஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு டாக்டர் பட்டம்

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு டாக்டர் பட்டம்

சுந்தர்.சி படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் அவரது ஆஸ்தான இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அதைத்தொடர்ந்து ஒருகட்டத்தில் மீசைய முறுக்கு என்கிற படம் மூலமாக அவரை ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தி அழகு பார்த்தார் சுந்தர்.சி. அந்த படத்தை தானே இயக்கி நடித்த ஹிஹாப் ஆதி, தொடர்ந்து படங்களில் ஒருபக்கம் நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ (Musical Entrepreneurship) என்பதை மையமாக வைத்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

பல புதிய தனியிசைக் கலைஞர்களை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தி வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு, தனது ஆராய்ச்சி இசையை வாழ்க்கையாக கொண்டோருக்கு உதவும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்ததை அடுத்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் (24-08-2023) நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் ஹிப்ஹாப் ஆதிக்கு மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முனைவர் பட்டத்தை வழங்கினார். இசைத் தொழில் முனைவோர் என்ற ஆராய்ச்சிப் பிரிவில் ஒருவர் டாக்டர் பட்டம் பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியதாவது: “இசையில் தொழில்முனைவு பிரிவில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்து, கடந்த ஆண்டு ஆய்வை நிறைவு செய்தேன். அந்த வகையில் இன்று, பட்டமளிப்பு விழாவில் அதற்கான பட்டத்தை பெற்றுக் கொண்டேன். வேறு பணிகளை செய்து கொண்டே ஆய்வு செய்தது சற்று கடினமாக இருந்தது. ” “அடுத்ததாக பி.டி. சார் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்

Most Popular

Recent Comments