HomeNewsKollywoodசொப்பன சுந்தரி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்க மறுத்த இயக்குனர்

சொப்பன சுந்தரி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்க மறுத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுடன் டூயட் பாடும் படங்களை ஒதுக்கிவிட்டு கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களாக தேடி நடித்து வரும் வெகு சில நடிகைகளின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். கடந்த வருடம் வெளியான டிரைவர் ஜமுனா, அதைத் தொடர்ந்து வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என அனைத்து படங்களும் கதாநாயகியை மையப்படுத்தி உருவான படங்கள்.

அந்த வகையில் அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் சொப்பன சுந்தரி. கரகாட்டக்காரன் பட காமெடி மூலம் கவுண்டமணி பிரபலப்படுத்திய வார்த்தை இந்த படத்திற்கு டைட்டிலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில் ”கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் தான். ‘கனா’ படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் அருண் ராஜா, ‘க /பெ ரணசிங்கம்’ படத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டி, ‘சொப்பன சுந்தரி’ படத்தை வழங்கிய இயக்குநர் சார்லஸ் என இவர்கள்தான் காரணம்.

நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குநர்கள் தான் பொறுப்பு. ஒரு இயக்குநர் தான் நடிகர் நடிகைகளை பிரம்மாண்டமாகவும்.. பிரமிப்பாகவும்… காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம். இயக்குநர் சார்லஸ், முதலில் இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். அவருடைய கோபத்தின் ஆயுள் அவ்வளவுதான்.

அதன் பிறகு கோபத்தால் எதுவும் நிகழாது. அதனால் இழப்பு ஏற்படுவது தான் அதிகம். நான் வாழ்க்கையில் நிறைய முறை கோபப்பட்டிருக்கிறேன். அதனால் ஏராளமானவற்றை இழந்திருக்கிறேன். பிறகு இருவரும் கதையைப் பற்றி விவாதித்தோம். அவருடைய அணுகுமுறையைக் கண்டு வியந்திருக்கிறேன். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக அவர் வலம் வருவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய திட்டமிடல் நேர்த்தியாக இருக்கும்.

எந்த ஒரு கலைஞரையும் காத்திருக்க வைக்காமல், அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். என்னுடைய பங்களிப்பை முப்பது நாளில் நிறைவு செய்தார் சொப்பன சுந்தரி’ படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments