V4UMEDIA
HomeNewsKollywoodநான் அடிப்பதற்கு முன்பே மிஸ்கினிடம் வருத்தம் தெரிவித்த விஜய்

நான் அடிப்பதற்கு முன்பே மிஸ்கினிடம் வருத்தம் தெரிவித்த விஜய்

வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது தனது 67வது படமாக உருவாகி வரும் லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இவர் கூட்டணி சேர்ந்து இருப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்தாலும் இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் மிஸ்கின் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவது படம் குறித்த ஆர்வத்தை பல மடங்காக்கி உள்ளது.

கடந்த சில நாட்களாக காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அங்கே ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த காட்சிகளில் கலந்துகொண்டு நடித்த இயக்குனர் மிஸ்கின் விஜய்யுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட விழா ஒன்றில் பேசியுள்ளார்.

“விஜய்யுடன் நடிக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது என்னை அவர் அடிக்க வேண்டிய காட்சி.. ஆனால் அதற்கு முன்பாகவே என்னிடம் வந்து நான் அடிக்கும்போது தவறுதலாக உங்கள் மீது அடிபட்டு விட்டால் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று முன்கூட்டியே வருத்தம் தெரிவித்தார்.

அதேசமயம் அந்த காட்சி படமாக்கி முடிந்ததும் வேகமாக வந்து என்னை கட்டிப்பிடித்து உங்களுக்கு ஒன்றும் அடிபடவில்லையே என்று அக்கறையாக விசாரித்தார்” என விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் மிஷ்கின்.

Most Popular

Recent Comments