நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் நுழைந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி டைரக்சனில் நடித்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியான படம் வாத்தி. தெலுங்கில் இந்த படம் சார் என்கிற பெயரில் ரிலீஸானது.


90களில் இறுதியில் கல்வி முறையில் நடந்த சில மாற்றங்களை ஒரு இளம் ஆசிரியர் எப்படி எதிர்கொண்டு சவால்களை சந்தித்து மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு தயார் படுத்துகிறார் என்பதை, போராட்டம் நிறைந்த அவருடைய வாழ்க்கையை இந்த படத்தில் படமாக்கி இருந்தார்கள்.


நிஜத்திலேயே இப்படி இருந்த ஆசிரியர்களில் ஒருவரான தெலுங்கானாவை சேர்ந்த கே ரங்கையா என்கிற வாத்தியாரை அழைத்து சமீபத்தில் படக்குழுவினர் கௌரவித்தனர். இந்தப்படம் தற்போது உலகெங்கிலும் சேர்த்து நூறு கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.


இந்தநிலையில் இந்த படத்தை தெலுங்கின் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா பார்த்துவிட்டு, இயக்குனர் வெங்கி அட்லூரியை அழைத்து மனம் விட்டு பாராட்டியுள்ளார். பாலகிருஷ்ணனின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.