கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மப்டி. அந்த படத்தின் தமிழ் ரீமேக்காக தற்போது சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்து தல என்கிற படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை ஓபிலி கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிம்பு தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் படத்தின் இன்னொரு நாயகனாக கௌதம் கார்த்திக் பேசும்போது, “இந்த புராஜெக்ட்டின் இரண்டு வெர்ஷன்களிலும் நான் நடித்துள்ளேன். இந்தப் படம் நிச்சயம் ‘மஃப்டி’ போல இருக்காது இயக்குனர் கிருஷ்ணா சார் முதலில் என்னை சந்தித்தபோது, ‘உன் கண்கள் ரொம்ப சாஃப்ட்டாக இருக்கு. அதிக கோபப்பட பழகிக்கோ’ என சொன்னார். அதை இப்போது வரை செய்து கொண்டிருக்கிறேன். படம் நிச்சயம் வெற்றியடையும்” என்றார்.

சிம்புவின் தீவிர ரசிகரும் சிம்பு படங்கள் வெளியாகும்போதெல்லாம் வித்தியாசமாக புரமோஷன் செய்பவருபவருமான நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, “என்னிடம் ஏன் மற்ற நடிகர்களின் படங்களுக்கு புரோமோஷனுக்கு வருவதில்லை என கேட்டனர். நான் சிம்புவின் தீவிர பக்தன். இந்தப் படத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து பூ தூவி புரோமோஷன் செய்ய வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். அதற்கான அனுமதி வாங்கும் வேலைகள் நடந்து வருகிறது” என்றார்


























