HomeNewsKollywoodலப்பர் பந்தை வைத்து விளையாட தயாராகும் ஹரிஷ் கல்யாண்

லப்பர் பந்தை வைத்து விளையாட தயாராகும் ஹரிஷ் கல்யாண்

கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சர்தார் மற்றும் காரி ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் பிரின்ஸ் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிப்பில் இந்த வருடம் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான ரன் பேபி ரன் திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது இந்த நிலையில் தற்போது லப்பர் பந்து என்கிற புதிய படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது

இந்த படத்தில் கதாநாயகர்களாக ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களின் ரைட்டரும், எஃப்ஐஆர் போன்ற படங்களின் இணை இயக்குனருமான தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கவுள்ளார்.

லவ் டுடே படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் புருஷோத்தமன் இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரன் பேபி ரன் படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் G.மதன் எடிட்டிங்கை மேற்கொள்ள, ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்

இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற இருக்கிறது. கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாவதால் லப்பர் பந்து என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments