HomeNewsKollywoodஊர்வசியின் 700 வது படத்தை தமிழில் இயக்கிய பிரியதர்ஷன்

ஊர்வசியின் 700 வது படத்தை தமிழில் இயக்கிய பிரியதர்ஷன்

முந்தானை முடிச்சு படத்தில் இயக்குனர் பாக்கியராஜ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஊர்வசி. அதன்பிறகு பல வருடங்கள் தொடர்ந்து கதாநாயகியாக நடித்த இவர், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களிலும் தனது பயணத்தை மாற்றிக்கொண்டு அதிலும் வெற்றிநடை போட்டு வருகிறார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் முன்பு சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் அம்மாவாக குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நிலையில் தற்போது இவர் நடித்துள்ள அனைத்து மொழிகளிலும் சேர்த்து 700 வது திரைப்படத்தை தொட்டுள்ளார் ஊர்வசி.

தமிழில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அப்பத்தா என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனரான பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். கைவிடப்பட்ட ஒரு தாயின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஊர்வசி.

கடந்த 27ஆம் தேதி தொடங்கி இன்று (ஜன-31) வரை மும்பையில் நடைபெற்று வரும் சாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இது குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது ஊர்வசி போன்ற திறமையான கலைஞருடன் அவரது 700 வது படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். இது எனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது” என்று கூறியுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments