V4UMEDIA
HomeNewsKollywoodஹாரர் திரில்லரில் கதிகலங்க வைக்கும் காஜல் அகர்வால்

ஹாரர் திரில்லரில் கதிகலங்க வைக்கும் காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகை என்கிற ஸ்தானத்தில் தொடர்ந்து இடம்பிடித்து வரும் குறிப்பிட்ட சில நடிகைகளில் நடிகை காஜல் அகர்வாலும் ஒருவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் திருமணம் செய்து கொண்டாலும் இப்போதும் அவருக்கான மார்க்கெட் வேல்யூ சீராகவே உள்ளது.

இந்த நிலையில் கதைக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சில படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அப்படி ஒரு படம் தான் கருங்காப்பியம்.

ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திகேயன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் ரெஜினா. ஜனனி ஐயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் யோகிபாபு, கலையரசன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன்பே எதிர்காலத்தில் நடக்கப் போவதை கணித்து எழுதப்பட்டுள்ள கருங்காப்பியம் என்கிற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் ஹாரர் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments