HomeNewsKollywoodசொந்த ஊரில் மறுக்கப்பட்ட உரிமை ; தமிழகம் அமலாபாலுக்கு வழங்கிய கௌரவம்

சொந்த ஊரில் மறுக்கப்பட்ட உரிமை ; தமிழகம் அமலாபாலுக்கு வழங்கிய கௌரவம்

மைனா படம் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக மாறினார் நடிகை அமலாபால். அதைத்தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது படங்களில் நடிப்பதை பெரிய அளவில் குறைத்துக் கொண்டு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். மேலும் இந்தியாவில் பல இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலாவும் சென்று வருகிறார்.

தற்போது பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் வந்து முருகனை தரிசித்துள்ளார் நடிகை அமலாபால். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பழனி கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் அமலாபால்.

கடந்த சில நாட்களுக்கு முன்ன கேரளாவில் பிரபலமான திருவைராணி குளம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது அமலாபாலின் மதத்தை காரணம் காட்டி அவரை உள்ளே அனுமதிக்க வில்லை.

அப்போது இந்த 2023ல் கூட மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது என கூறியிருந்தார் அமலாபால். அப்படி சொந்த ஊரில் அவருக்கு உரிமை மறுக்கப்பட்ட நிலையில்  வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவருக்கு மிகப்பெரிய கௌரவத்தை வழங்கியிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments