HomeNewsKollywoodதாய் வீட்டுக்கு திரும்பிய உணர்வு ; சென்னை வந்த ஹன்சிகா மகிழ்ச்சி

தாய் வீட்டுக்கு திரும்பிய உணர்வு ; சென்னை வந்த ஹன்சிகா மகிழ்ச்சி

நடிகை ஹன்சிகா மும்பையைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழில் இயக்குனர் பிரபுதேவாவால் அறிமுகப்படுத்தப்பட்டு இங்கேயே பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவரது திருமணம் சமீபத்தில் சோகைல் கத்தூரியா என்பவருடன் இனிதே நடந்தேறியது.

இதனை தொடர்ந்து மும்பையில் தனது திருமண இல்லற வாழ்க்கையை துவங்கிய ஹன்சிகா ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் ஹன்ஷிகா பேசும்போது, “எந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் முடிந்து புகுந்த வீடு சென்ற பிறகு மீண்டும் தனது தாய் வீட்டிற்கு திரும்புவது ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.

அப்படி சென்னைக்கு நான் திரும்பி வந்துள்ளது தமிழ் அம்மா வீட்டிற்கு திரும்பி வந்த உணர்வை தருகிறது. நீங்கள் அனைவரும் காட்டும் அளவற்ற அன்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments