தமிழில் சாதித்த இயக்குனர்கள் தெலுங்கிலும் சென்று தங்களது எல்லையை விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளனர், அந்த வகையில் இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து தற்போது வெங்கட்பிரபு தெலுங்கில் இளம் நடிகர் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி என்கிற படத்தை இயக்கி வருகிறார்.


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் நடிக்கின்றனர்.,


இந்த படத்திற்கு மிகப்பெரிய ஹைலைட்டாக இளையராஜாவும் அவரது இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைத்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படம் மே-12ல் படம் வெளியாகும் என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து புத்தாண்டு பரிசாக இந்த படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள க்ளிம்ப்ஸில் வசனங்கள் ஏதும் இல்லை என்றாலும் இந்த ஆக்ஷன் பேக்ட் டீசர் புராஜெக்ட்டின் தரத்தை காட்டுகிறது.


இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை க்ளிம்ப்ஸின் தரத்தை மேலும் உயர்த்துவதாக உள்ளது. மேலும், இது படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.