V4UMEDIA
HomeNewsKollywoodகவின் படத்துக்கு வெளிச்சம் கொடுக்கும் உதயநிதி

கவின் படத்துக்கு வெளிச்சம் கொடுக்கும் உதயநிதி

சின்னத்திரையிலிருந்து வெற்றிகரமான வெள்ளித்திரை நடிகராக மாறியவர் நடிகர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கிடைத்த புகழ் இவருக்கு கூடுதல் போனஸ் ஆக அமைந்து விட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கவின் நடித்துள்ள படம் தான் டாடா.

இந்த படத்தை கணேஷ் பாபு இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவீஸ் எஸ் அம்பேத்குமார் தயாரித்துள்ளார். கதாநாயகியாக பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களிடம் புகழ் பெற்ற மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இயக்குனர் பாக்யராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,

இந்த நிலையில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது, இதனை தொடர்ந்து நிச்சயமாக டாடா படத்திற்கு மிகப்பெரிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது,

இந்த படத்தின் ஆடியோ டிரைலர் வெளியீடு மற்றும் திரையரங்குகளில் படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments