‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் பல பிரபல நட்சத்திரங்கள் நிறைந்த ‘ஜெயிலர்-2’-வின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் அடையாளமாக கருதப்படும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ஐந்து தசாப்தங்களாக சினிமாவில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். சமீபத்தில், புகழ்பெற்ற இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

‘சன் பிக்சர்ஸ்’ தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்த புகைப்படத்தில், “பேட்ட, கூலி, ஜெயிலர்”, என இயக்குனர்கள் மற்றும் ரஜினிகாந்த் தொடர்புடைய படங்களை குறிக்கும் விதத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர், ‘சன் பிக்சர்ஸின்’ அடுத்தடுத்த திரைப்பட வெளியீடுகளை குறிக்கும் விதத்தில் இந்த பதிவு உள்ளது.
‘ஜெயிலர்-2’ படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், “ரஜினிகாந்த் சாருடன் பணிபுரிவது எப்போதுமே ஒரு பாக்கியம். அவர் படப்பிடிப்புத் தளத்திற்கு கொண்டு வரும் ஈர்ப்பும் ஆற்றலும் ஈடு இணையற்றவை” என்று தனது ஆழ்மனதில் இருந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக, அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும் மீண்டும் இணைவதால், காட்சி மற்றும் இசை பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று தெரிகிறது.

சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில், படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் ஒரு பிரமாண்டமான கிராமம் போன்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கதைக்களம் மற்றும் நடிகர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாத நிலையில், ஜெயிலரின் தொடர்ச்சியாக ஜெயிலர்-2 இருக்குமா? அல்லது புதிய கதைக்களம் கொண்டு நகருமா? என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

‘ஜெயிலர்-2’ படத்தைத் தவிர, இந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள அதிரடி காட்சிகளுக்கு பஞ்சமில்லாத ‘கூலி’ படத்திலும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் சகிர் உள்ளிட்ட பிரபல நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதால், 2025 ரஜினி ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான ஆண்டாக அமையும்.
‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் ரஜினிகாந்தின் வைரலான புகைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மட்டும் இருந்திருத்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.