Home News Kollywood இன்று மறுவெளியீடான ‘பகவதி; ஏப்ரல் 18 – இல் மறுவெளியீடாகும் ‘சச்சின்’!

இன்று மறுவெளியீடான ‘பகவதி; ஏப்ரல் 18 – இல் மறுவெளியீடாகும் ‘சச்சின்’!

‘பகவதி’ இன்று மீண்டும் வெளியான நிலையில்; ஏப்ரல் 18 – இல் ‘தளபதி’ விஜய் நடித்த ‘சச்சின்’ மறுவெளியீடாவதாக ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி அளித்தார் தயாரிப்பாளர் ‘கலைப்புலி எஸ்.தாணு!

இயக்குனர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படம் ₹4 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸில் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இதில் நடிகர் ஜெய், ‘தளபதி’ விஜய்யின் தம்பியாக நடித்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, ‘பகவதி’ 2025 மார்ச்-21-ஆம் தேதியான இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. மதன் மூவிஸ் தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் மீண்டும் பெரிய திரையில் இப்படத்தைப் பார்த்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக,’தளபதி’ விஜய் நடித்த மற்றொரு படமான ‘சச்சின்’ படமும் மீண்டும் வெளியாகிறது என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘தளபதி’ விஜய்யின் ‘சச்சின்’ படம் விரைவில் பிரமாண்டமாக மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் 18 – ஆம் தேதி திரைக்கு வரும் என்று தனது அதிகாரப் பூர்வமாக சமூக ஊடகப் பக்கங்களில் அறிவிப்பு போஸ்டரை இன்று பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘பகவதி’ ‘சச்சினு’க்கு முன்னதாக வருவதால், ‘தளபதி’ விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது!