‘பிரேமலதா விஜயகாந்த்’ தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது ‘தி கோட்’ திரைப்படத்தில் ஏ.ஐ தொழில் நுட்பம் மூலம் நடிகர் விஜயகாந்தை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு இயக்குனர் ‘வெங்கட் பிரபு’ ஒரு ஐந்து ஆறு முறை எங்கள் வீட்டிற்கு வந்து பேசினார். என் மகன் சண்முக பாண்டியன் இடம் இது குறித்து அவர் பேசியிருந்தார். பிரச்சாரத்தின் நடுவே நான் சென்னை இல் இருந்த போது என்னை நேரில் சந்தித்து இது குறித்து அனுமதி கேட்டார்.
நடிகர் ‘விஜய்’ தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறினார். இன்று விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அந்த இடத்தில் இருந்து நான் யோசிக்க வேண்டும், செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது எல்லோருக்கும் தெரியும் அவர் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் அவருக்கு மிகப்பெரிய பாசம் உண்டு.
என் கணவர் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருக்க மாட்டார். விஜய் என்னை சந்திக்கும் பொழுது நான் நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். “வெங்கட் பிரபுவை எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும் இளையராஜா குடும்பத்துடன் நான் நன்றாக பழகி இருக்கிறேன், உனக்கும் விஜய்க்கும் என்னால் மறுப்பு சொல்ல முடியாது என்று வெங்கட் பிரபுவிடம் கூறினேன்”. இவ்வாறு பிரமலதா தெரிவித்தார்.