இயக்குனர் ‘ஹரி’ இயக்கத்தில் ‘விஷால்’ கதாநாயகனாகவும் ‘பிரியா பவானி சங்கர்’ கதாநாயகியாகவும் நடிக்கும் திரைப்படம் ரத்னம். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வழக்கமான இயக்குனர் ‘ஹரி’ படங்களைப் போல இத்திரைப்படத்தின் திரை முன்னோட்டமும் பரபரப்பாக உள்ளது. அதிரடியான ஆக்சன் காட்சிகள், காதல், சண்டை காட்சிகள், போன்ற படமாக இருக்கும் என்று தெரிகிறது. விஷாலின் மிரட்டலான நடிப்பு ‘சமுத்திரகனி’ மற்றும் ‘கௌதம் மேனன்’ அவர்களின் வசனங்கள் அதிரடியாக உள்ளது.
இத்திரைப்படம் இயக்குனர் ஹரியின் 17-வது திரைப்படம் ஆகும் அவரது ‘சாமி’, ‘சிங்கம்’ திரைப்படங்களுக்குப் பிறகு சிறந்த ஆக்சன் திரைப்படத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் அதை இப்படத்தில் சாத்தியப்படுத்தி உள்ளதாகவும் இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.