V4UMEDIA
HomeNewsKollywoodமாநகரம் பட குட்டிப்பையன் இப்போ ரங்கோலி பட ஹீரோ

மாநகரம் பட குட்டிப்பையன் இப்போ ரங்கோலி பட ஹீரோ

குழந்தை நட்சத்திரங்கள் ஹீரோவாக அறிமுகமாகி சாதிப்பது தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அந்த வகையில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக குட்டிப் பையனாக அறிமுகமாகி நடித்தவர் மாஸ்டர் அமரேஷ்.

இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் பேரன். நடிகர் உதயா மற்றும் இயக்குனர் ஏ எல் விஜய் ஆகியவரின் சகோதரி மகன். அந்த குடும்பத்திலிருந்து தற்போது ஒரு வாரிசு நடிகராக ரங்கோலி என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் அமரேஷ்.

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. கதாநாயகியாக மலையாள திரை உலகை சேர்ந்த இளம் நட்சத்திரம் பிரார்த்தனா நடித்துள்ளார்.. இந்த படத்தில் ஆடுகளம் முருகதாஸ் அமித் பார்க்கவும் நடிகை சாய் ஸ்ரீ அக்ஷயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

செப்டம்பர் 1 அன்று ரங்கோலி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

தனது பேரன் கதாநாயகனாக அறிமுகமாவது குறித்து தயாரிப்பாளர் கே எல் அழகப்பன் பேசும்போது, “இன்று என் வாழ்நாளில் எனக்கு முக்கியமான நாள். என் பேரன் இன்று கதை நாயகனாக நடித்துள்ளான். நான் சினிமா துறைக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் திரைத்துறையில் பல பணிகளைச் செய்த பிறகு தயாரிப்பாளராக அறிமுகமானேன். நான் என் குடும்பத்தில் அனைவரையும் படித்த பிறகுதான் சினிமாத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்று கூறுவேன், ஆனால் ஹமரேஷ் படிக்கும் போதே நடிகராகிவிட்டார்.

இந்தப் படத்தில் தமிழ் வாத்தியாராக நடித்தவர் அழகாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் அம்மா கதாபாத்திரம் நடித்த பெண்மணி சிறு பெண் தான் ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் அருமையாகப் பொருந்தியுள்ளார்.

ஹமரேஷ் அருமையாக நடித்துள்ளார். கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும், நீங்கள்தான் இந்த படத்திற்கு ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Most Popular

Recent Comments