V4UMEDIA
HomeNewsKollywoodகயல் ஆனந்தி நடிக்கும் சைக்காலஜிக்கல் திரில்லர் ‘ஒயிட் ரோஸ்’

கயல் ஆனந்தி நடிக்கும் சைக்காலஜிக்கல் திரில்லர் ‘ஒயிட் ரோஸ்’

பிரபல இயக்குனர் சுசி கணேசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராஜசேகர். இவர் தற்போது ஒயிட் ரோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் மையக்கதை பற்றி இயக்குநர் ராஜசேகர் கூறும்போது, ​​“ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்று இறுதி வரை பல திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப்படம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

“கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில் பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள்” என்றும் கூறியுள்ளார் இயக்குனர் ராஜசேகர்.

Most Popular

Recent Comments