V4UMEDIA
HomeNewsKollywoodநாளை வெளியாகும் ஜெயிலர் ‘ஷோகேஸ்’

நாளை வெளியாகும் ஜெயிலர் ‘ஷோகேஸ்’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வெளியாகும் நாள் நெருங்கு நெருங்க படம் தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய அந்த ஒரு மணி நேர பேச்சு ரசிகர்களின் நாடி நரம்பு எல்லாம் துடிக்கும் விதமாக உற்சாகப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து மூன்று லிரிக் பாடல்கள் வெளியாகி மாஸ் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக காவாலா பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் நாளை காலை இந்த படத்தின் ஷோகேஸ் வெளியிடப்பட இருக்கிறது. அனேகமாக இந்த படத்தின் டீசர் என்று கூட இதைக் கூறலாம். இது இன்னும் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது நாளை தெரிந்து விடும்.

Most Popular

Recent Comments