சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக துவங்கியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து காவாலா என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ வெளியானது. அனிருத் இசையில் தமன்னாவின் ஒரு அதிரடி நடனப் பாடலாக இது உருவாகி இருந்தது.
இப்போது வரை இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும், மட்டுமல்லாமல் இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு அனைவரையும் கவர்ந்த பாடலாக அது மாறிவிட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடலான ஹுக்கும் என்கிற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. முதல் பாடல் தமன்னாவின் பாடல் என்றால் இரண்டாவது பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்காக உருவான பாடல் போல அமைந்துள்ளது,
இந்தப் பாடலுக்கும் முதல் பாடலைப் போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது, இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகிபாபு, மிர்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இவர்களை எல்லாம் இந்த படத்தில் எப்படி பயன்படுத்தி இருப்பார்களோ என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.