V4UMEDIA
HomeNewsKollywoodகண்ணிவெடியாக மாறும் கீர்த்தி சுரேஷ்

கண்ணிவெடியாக மாறும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷை பொருத்தவரை ஒரு பக்கம் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக, இன்னொரு பக்கம் முக்கிய ஹீரோக்களின் படங்களில் தங்கையாக கூட நடித்து வருகிறார். அது மட்டுமல்ல தனி ஒரு ஆளாக கதையை தாங்கி பிடித்து நிற்கும் கதையின் நாயகியாகவும் சில படங்களில் நடித்துள்ளார்,

இப்படி கலவையாக மாறி ஒரு ‘மகாநடி’கையாக தன்னை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதால் கதாநாயகியை மையப்படுத்தி படம் இயக்க விரும்பும் பல இயக்குனர்களின் தேர்வாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார்.

அந்த வகையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் கன்னிவெடி என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். விஜய் டிவி புகழ் ரக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,

இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

Most Popular

Recent Comments