நடிகர் வடிவேலுவை முதன்முறையாக கதாநாயகனாக மாற்றி முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் சிம்புதேவன். இப்போதும் அந்த படம் ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து சில படங்களை இயக்கிய சிம்பு தேவன் விஜய்யை வைத்து புலி என்கிற பேண்டஸி படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் அவர் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை.
இந்த நிலையில் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கும் சிம்பு தேவன் இந்த முறை நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து போட் என்கிற திரைப்படத்தை இயக்குகிறார்,
“முழுக்க முழுக்க கடலில்” என்கிற கேப்சனுடன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளதை பார்க்கும்போது கடல் சார்ந்த படமாக அதே சமயம் காமெடிக்கு முக்கியத்துவம் தரும் படமாக இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.