HomeNewsKollywoodதீபாவளி மும்முனை போட்டியில் களமிறங்கும் ஜப்பான்

தீபாவளி மும்முனை போட்டியில் களமிறங்கும் ஜப்பான்

தமிழில் இந்த வருடங்கள் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ஆகஸ்ட் 15, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை என வரிசையாக சிறப்பு தினங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் தாண்டி வரக்கூடிய தீபாவளி பண்டிகையை குறிவைத்து சில படங்கள் களம் இறங்க உள்ளன.

அதில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுளக்ஸ் திரைப்படமும் ஏற்கனவே தாங்கள் தீபாவளி பண்டிகையில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டன.

இவற்றுடன் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள  ஜப்பான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல தயாரிப்பு நிறுவனம் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தீபாவளி பண்டிகை என்று மும்முனை தாக்குதலுக்கு தயாராகிவிட்டது கார்த்தியின் ஜப்பான். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் இந்த தீபாவளி போட்டியில் கலந்து கொள்ளும் என சொல்லப்பட்டு வருகிறது ஆனால் அது குறித்த இன்னும் அதிகாரப்பூர் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments