பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகர், நடிகர் மகேஷ்பாபு நடித்த, ஒக்கடு உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர். இதற்கு முன்னதாக அனுஷ்காவை வைத்து ராணி ருத்ரமா தேவி என்கிற படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது சாகுந்தலம் என்கிற புராண கதையை மையமாக வைத்து சாகுந்தலம் என்கிற பெயரிலேயே படத்தை இயக்கி உள்ளார் குணசேகர்.


இதில் சகுந்தலையாக சமந்தாவும் துஷ்யந்த மகாராஜாவாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். இந்த கதையில் பிரதான கதாபாத்திரம் என்றால் அது துர்வாச முனிவர் கதாபாத்திரம்தான்.


சகுந்தலை துஷ்யந்தன் பிரிவுக்கு காரணமாக அமைந்தது இவரது சாபம்தான். அந்த வகையில் இந்த படத்தில் துர்வாச முனிவர் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது கதாபாத்திர போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.