HomeNewsKollywoodதளபதி 67 பட டைட்டில் அறிவிப்பு வெளியீடு

தளபதி 67 பட டைட்டில் அறிவிப்பு வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் தற்காலிகமாக தளபதி 67 என்கிற பெயரில் உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி 3ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது காஷ்மீர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் மற்றும் முக்கிய வேடங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் என பலரும் அறிவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து இந்த படத்தின் பூஜை நிகழ்வும் நடைபெற்றது.

இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, பிரியா ஆனந்த் நடிக்க முக்கிய வேடங்களில் இயக்குனர்கள், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் உருவான சமயத்தில் படப்பிடிப்பு நடந்து நீண்ட நாட்களுக்குப் பிறகே அதன் டைட்டில் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்த முறை விஜய் ரசிகர்களை அப்படி காக்க வைக்காமல் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளது

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் விஜய்யின் ஆர்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments