HomeNewsKollywoodராம் டைரக்ஷனில் நடிக்கும் சிவா

ராம் டைரக்ஷனில் நடிக்கும் சிவா

சினிமாவில் சில காம்பினேஷன்கள் மட்டும் எதிர்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்தி விடும். அப்படி கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு என உணர்வுபூர்வமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராம். தற்போது மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து ஏழுகடல் ஏழுமலை என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அடுத்ததாக யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சிவாவை தனது அடுத்த படத்தில் ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் ராம்.

நடிகர் சிவாவை பொறுத்தவரை எப்போதுமே நகைச்சுவை அம்சம் கொண்ட படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது படங்களில் பெயரளவுக்கு கூட சோகம் என்பதே இருக்காது. எந்நேரமும் சிரித்த முகத்துடனே இருப்பார் சிவா.

இப்படிப்பட்ட இரண்டு துருவங்கள் ஒரு படத்திற்காக இணைந்திருப்பது ஆச்சரியமான விஷயம் தான். இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகர் சிவாவும் உறுதி செய்துள்ளார்.

“என்னுடைய கேரியரில் இந்த படம் ஒரு இன்ட்ரஸ்டிங்கான படமாக இருக்கும்” என்று கூறியுள்ள சிவா இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி ஆறாம் தேதி துவங்குகிறது என்றும் படத்தின் பெரும்பாலான முக்கியமான காட்சிகள் கோவையில் படமாக்கப்பட உள்ளன என்றும் கூறியுள்ளார்.

நிச்சயமாக ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் படமாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments