V4UMEDIA
HomeNewsKollywoodபா பா பிளாக் ஷீப் படம் மூலம் இயக்குனரான யூ ட்யூபர் ராஜ்மோகன்

பா பா பிளாக் ஷீப் படம் மூலம் இயக்குனரான யூ ட்யூபர் ராஜ்மோகன்

யூடியூப் சேனல்கள் முன்னணி வகிக்கும் சேனல் பிளாக் ஷீப். இதில் தனது தன்னம்பிக்கை தரும் பேச்சால் ரசிகர்கள் பலர் பலரை கவர்ந்து இழுத்தவர் பேச்சாளர் ராஜ்மோகன். அதுமட்டுமல்ல நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ள இவர், விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படத்தில் அமைச்சரின் உதவியாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் முதன்முதலாக டைரக்ஷனில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படத்திற்கு பா பா பிளாக் ஷீப் என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.

பூஜையுடன் இந்த படம் தற்போது துவங்கப்பட்டுள்ளது.. பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளி கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக இந்த “பாபா பிளாக் ஷீப்” உருவாகவுள்ளது.

இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments