HomeNewsKollywoodநந்தன் படக்குழுவுடன் சபரிமலை பயணம் கிளம்பிய சசிகுமார்

நந்தன் படக்குழுவுடன் சபரிமலை பயணம் கிளம்பிய சசிகுமார்

கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே நடிகர் சசிகுமார் நடித்த நான் மிருகமாய் மாற மற்றும் காரி என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் காரி திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது நந்தன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார். கத்துக்குட்டி, உடன்பிறப்பு ஆகிய படங்களை இயக்கிய ரா.சரவணன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் இதற்கு முன்பு ரசிகர்கள் பார்த்திராத புதிய சசிகுமாரை பார்க்கலாம் என சொல்லுமளவிற்கு வித்தியாசமான தோற்றத்தில், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சசிகுமார்.

அவருக்கு ஜோடியாக கடந்த வருடம் பிக்பாஸ் சீசன்-5ல் கலந்துகொண்ட சுருதி பெரியசாமி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிக்கும்போதே சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்த சசிகுமார், தற்போது படக்குழுவினருடன் சபரிமலைக்கு யாத்திரை கிளம்பி சென்றுள்ளார். மதுரை சென்று அங்கிருந்து சில நண்பர்களுடன் சேர்ந்து இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் சசிகுமார். இவர்களுடன் படத்தின் இயக்குனர் ரா.சரவணனும் உடன் சென்றுள்ளார்.

இந்த படத்தில் சசிகுமார் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து அவருக்கு ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லையாம்.

இதுபற்றி இயக்குனர் ரா.சரவணன் கூறும்போது, “ஏன்டா இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டோம்னு பல நாள் வருத்தப்பட்டேன்.. கேரக்டரை உள்வாங்கவே முடியலை. வேற காட்சிகளை எடுக்க சொல்லிட்டு வந்துட்டேன். எதையும் கடந்துபோற பக்குவம் கொண்ட அந்த கேரக்டரா மாறிய பின்னால பேய் பிடிச்ச மாதிரி இருந்தது” என்று சசிகுமார் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments