HomeNewsKollywood2022-ல் இந்திய அளவில் தனுஷுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

2022-ல் இந்திய அளவில் தனுஷுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

ஐஎம்டிபி என்கிற இணையதளம் வருடந்தோறும் புகழ்பெற்ற நட்சத்திரங்களை பட்டியலிட்டு இந்திய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் யார் இருக்கிறார்கள் என்பதை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற நட்சத்திரங்களின் பட்டியலில் முதலாவது இடத்தில் நம் தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் தனுஷ் இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தனுஷ் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகிற்கே மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் தனுஷை பொருத்தவரை இந்த வருடத்தில் மட்டும் அவர் நடித்த படங்கள் பாலிவுட், ஹாலிவுட் என மிகப்பெரிய அளவில் வெளியாகி அவருக்கு வரவேற்பையும் புகழையும் இன்னும் அதிகமாக தேடித் தந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது.

அடுத்ததாக அவர் தெலுங்கில் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த வருடம் தனுஷுக்கான வருடம் என்று சொன்னால் அது மிகையல்ல.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments