V4UMEDIA
HomeNewsKollywoodபரத்தின் 50வது படம் அவருக்கு மைல்கல்லாக அமையுமா ?

பரத்தின் 50வது படம் அவருக்கு மைல்கல்லாக அமையுமா ?

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமான நடிகர் பரத் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் திரையுலகில் தாக்குப்பிடித்து நிற்கிறார். அதேசமயம் அவருடன் அறிமுகமான அல்லது அவருக்கு பின் வந்த நடிகர்கள் பலரும் இப்போது பீல்டில் இல்லாத நிலையில், தனது கவனமான கதை தேர்வு மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார் பரத்.

இந்த நிலையில் அவரது ஐம்பதாவது படமாக உருவாகியுள்ளது லவ். இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது

தெலுங்கு, மலையாள படங்கள் தமிழில் டப்பிங் ஆகும்போது அதற்கு வசனம் எழுதி புகழ் பெற்ற கதாசிரியரும் வசனகர்த்தாவுமான ஆர்.பி பாலா இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் பரத், “இந்தப்படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. இந்தப்படக்குழு என் குடும்ப நண்பர்கள் மாதிரி பழகினார்கள். R.P.பாலா மிக நல்ல இயக்குநர். அவருடன் இந்தப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி.

என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. R.P.பாலா சாருக்கு நன்றி. P.G முத்தையா சார் ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்துள்ளார் அவருக்கு நன்றி.

வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன், அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். டேனி இதில் வித்தியாசமாக நடித்துள்ளார். விவேக் மிகச்சிறந்த ஆக்டர். இப்படம் உங்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும்” என்றார்.

Most Popular

Recent Comments