V4UMEDIA
HomeNewsKollywoodமின்னல் முரளிக்கும் வீரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

மின்னல் முரளிக்கும் வீரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

நடிகரும் இசையமைப்பாளரும் இயக்குனருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ ஆர் கே சரவணன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக ஆதிரா ராஜ் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்த படத்தின் இயக்குனர் சரவணன் பேசும்போது, “கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் இந்த கதை எழுதி முடித்து விட்டேன். அப்போதே ஆதியிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையில் உள்ள ஃபேன்டசி சூப்பர் ஹீரோ விஷயங்கள் போன்றவற்றின் மீது நம்பிக்கை வைத்து இந்த கதை அவருக்கு பிடித்திருந்தது

எடிட்டர் பிரசன்னாவை பற்றி இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சூப்பர் ஹீரோ கதை செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, ஒரு கேரக்டருக்கு கையில் இருந்து எலக்ட்ரிக் பவர் வந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சொன்ன ஐடியா தான் கதையாக டெவலப் செய்தோம்.

ஆதியின் கதாபாத்திரத்திற்கு மட்டும் கீர்த்தி, கிட்டத்தட்ட ஒரு பத்து காஸ்டியூம் டிசைன் செய்தார். மின்னல் முரளி’, ‘வீரன்’ இரண்டு படத்தின் கதையும் ஒன்றா என்ற விஷயம் பலரும் கேட்கிறார்கள்.

‘மின்னல் முரளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2018-ல் வெளியான போது நாங்கள் அந்த படத்தின் கதையையும், எங்கள் கதையையும் கிராஸ் செக் செய்துவிட்டோம். இரண்டும் வெவ்வேறு கதைகள்.  ‘வீரன்’ கதை ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே இது முற்றிலும் வேறு என்பது உங்களுக்கு தெரியும்” என்றார்

Most Popular

Recent Comments