HomeNewsKollywoodபா.ரஞ்சித் தயாரிப்பில் மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகும் புளூஸ்டார்

பா.ரஞ்சித் தயாரிப்பில் மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகும் புளூஸ்டார்

சமீபகாலமாக விளையாட்டுப் போட்டிகள் பற்றிய படம் அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு பற்றிய படங்கள் அதிகம் வருகின்றன. இதில் உலக அளவிலான கிரிக்கெட் முதல் உள்ளூர் கிரிக்கெட் வரை விதவிதமான படங்கள் தயாராகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் இணைந்து நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள லால் சலாம் படமும் ஒன்று.

இது தவிர ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து என்கிற படமும் கிரிக்கெட் மையப்படுத்திய உருவாகி வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் அவரது சீடரான ஜெயக்குமார் என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள புளூ ஸ்டார் என்கிற திரைப்படமும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் சாந்தனு பாக்கியராஜும் அசோக் செல்வனும் கிராமத்து கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் இந்த படத்திற்கான ஆந்தமும் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன், பிருத்திவிராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிஸி ஆண்டனி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments