HomeUncategorized'லோகேஷ் கனகராஜி'ன் கதையில் 'ராகவா  லாரன்ஸ்' நடிக்கும் 'பென்ஸ்'!

‘லோகேஷ் கனகராஜி’ன் கதையில் ‘ராகவா  லாரன்ஸ்’ நடிக்கும் ‘பென்ஸ்’!

‘லோகேஷ் கனகராஜ்’ ‘ரஜினி’யை வைத்து ‘ரஜினி – 171’ படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனராக இருந்து நடிகராக அறிமுகமாகி தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார். லோகேஷ் கனகராஜ் அவர்களின் முதல் திரைப்படம் ‘மாநகரம்’ கடந்த 2017 – ஆம் ஆண்டு திரையில் வெளியானது. இவர் இயக்கிய 5 திரைப்படங்கள் வெளியான நிலையில், திரைத்துறைக்கு வந்து 7 வருடங்கள் ஆகின்றன.

‘ஜீ ஸ்குவாட்’  என்ற  தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். ‘உறியடி விஜயகுமார்’ நடிப்பில் உருவான ‘ஃபைட் கிளப்’ படத்தை இந்நிறுவனம் சார்பில் வெளியிட்டார். இந்நிலையில் ‘ராகவா லாரன்ஸ்’ நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். ‘ரெமோ’ ‘சுல்தான்’ போன்ற படங்களை இயக்கிய ‘பாக்கியராஜ் கண்ணன்’  இப்படத்தை இயக்குகிறார். ‘லோகேஷ் கனகராஜ்’ கதையில் உருவாகும் இப்படத்திற்கு ‘பென்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குனர் ‘லோகேஷ் கனகராஜ்’ கதையிள் ‘ராகவா லாரன்ஸ்’ நடிக்கும் இத்திரைப்படத்தை, பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் அறிமுக போஸ்டரை இப்படக் குழுவினர் வெளியிட்டனர். சமீபத்தில் ‘லோகேஷ் கனகராஜ்’, ‘சுருதிஹாசன்’ இணைந்து நடித்த ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் வெளியானது.

இத்திரைப்படத்தைப் பற்றிய மேலதிக தகவல்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments