Home Gallery Celebrities ‘தனுஷ்’ நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல் காணொளி விரைவில் வெளியாகவுள்ளது!

‘தனுஷ்’ நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல் காணொளி விரைவில் வெளியாகவுள்ளது!

‘தனுஷ்’ இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும்  என்ற அறிவிப்பு தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்திற்கு ‘ஏ.ஆர்.ரகுமான்’ இசையமைத்துள்ளார்.

தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. துஷாரா விஜயன்,காளிதாஸ் ஜெயராம்,எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் இப்படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையின், தற்போது இந்த புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் நின்று கொண்டிருக்க துஷாரா விஜயன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இந்த அறிவிப்பு போஸ்டரில் தனுஷின் தோற்றம் தனி கவனத்தை பெறுகிறது. இத்திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.